தூத்துக்குடியில் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி MP
தூத்துக்குடி வ.உ.சி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று (15/07/2025) கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தூத்துக்குடி வ.உ.சி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

