காஞ்சிபுரம்: திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காங்கிரஸ் பகுதி தலைவர் சப்தகிரி தலைமையில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் ‘திருக்குறள் முற்றோதல்’ இயக்கத்தில் திருக்குறள் கற்று வரும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கச்சபேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள அரங்கில் காஞ்சிபுரம் மாநகர பகுதி தலைவர் சப்தகிரி தலைமையில் நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.
இதில் திருக்குறள் ஆசிரியர் பரமானந்தம் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் எழுது பொருட்கள்மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜீவரத்தினம், கச்சபேஸ்வரர் ஆலய நிர்வாகி பெருமாள், காங்கிரஸ் நிர்வாகிகள் சுமங்கலி சீனிவாசன், டிபி சீனிவாசன், லியாகத் ஷெரிப், பகுதி தலைவர் பட்டு காமராஜ், பிள்ளையார்பாளையம் கணேசன், பாலமுருகன், நூல் கடை ராதாகிருஷ்ணன், முத்து கணேசன், வட்ட தலைவர் மோதிலால், பூந்தோட்டம் பழனி, ஜோதி, நாகராஜன் உள்ளிட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

