காமராஜ் பிறந்த தின விழா: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்
பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 123 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக 123 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 123 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, வெள்ளைபட்டி விளக்கில் அருகில் காங்கிரஸ் முன்னாள் கீழ அரசடி பஞ்சாயத்து தலைவர் ஜேசுதாசன் தலைமையில், சிறப்பு அழைப்பாளர் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் விழாவில் கலந்துகொண்டு 123 ஏழைப் பெண்களுக்கு அரிசிப் பை சேலைகள், கணவனை இழந்த பெண்களுக்கு 50தையல் மிஷின் மற்றும் 2பெண்களுக்கு கிரைண்டர், 5 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

இந்த விழாவில், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் S.பெத்துராஜ், வர்த்தக காங்கிரஸ் மாநகர தலைவர் A.J.அருள்வளன், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், INTUC தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ், மணி, பாலகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் அசன் பாத்திமா, சேசையா, குரூஸ் மிக்கேல், மரிய தனுஷ் லாஸ், அந்தோணிசாமி, பேச்சிமுத்து, ஹரி விக்னேஷ், சங்கர பாண்டி, மோகன், பெரியசாமி, ஜெயராமன் மற்றும் மகளிர் அணி நிர்வாகி, கிராமத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

