மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி
மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பில் மாலை அணி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பில் மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது, நடிகர் ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதேபோல், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நடிகர் திலகம் சிவாஜியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பஞ்சாயத்துராஜ் தலைவர் முத்துக்குமார், தொழிற்சங்கம் பாலாஜி, மாரிக்கனி, போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீர வாஞ்சிநாதன், மகிளா காங்கிரஸ் தலைவி கமலா உள்பட ஏராளமான சிவாஜி ரசிகர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

