ஆடி அமாவாசை: தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை: தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தூத்துக்குடியில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதல் வழிபாடு செய்து வருகின்றனர்.

தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக தை அமாவாசை ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.

கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரைக் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புதிய துறைமுகம் கடற்கரையில் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

புதிய துறைமுகம் கடற்கரை பகுதிக்குள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தர்ப்பணம் கொடுத்தவர்கள் பின்னர் ஆலயம் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *