காஞ்சிபுரம் விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் நவகிரக ஆலயத்தில் பால்குட அபிஷேக விழா
காஞ்சிபுரம் சின்னசாமி நகர் பகுதியில் அமர்ந்தால் பாலித்து வரும் செல்வ விநாயகர் விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் நவகிரக ஆலயத்தில் ஆடி திருவிழாவிற்கு பால்குட அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் வேலிங்கப்பட்டறை சின்னசாமி நகர் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் நவகிரக ஆலயத்தில் ஆடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பணமூடிஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால் குடம் புறப்பட்டு பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் திருகரங்களாலேயே அபிஷேகம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு ரவிக்கை மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சின்னசாமி நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாந்தி சேதுராமன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

