தூத்துக்குடியில் பிரதமர் வருகைக்கு காங்கிரஸ் கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எழுச்சிமிகு தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் அறிவித்தபடி தூத்துக்குடி புதிய விமான நிலையம் திறந்து வைக்க வருகை தந்த பிரதமர் மோடி அவர்கள், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை குறிப்பாக கல்விக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள் எனவே பிரதமர் மோடி அவர்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு செல்கின்றார்களோ அந்தப் பகுதியில் உள்ள மாவட்ட தலைவர்கள் தலைமையில் பிரதமர் மோடி அவர்களை திரும்ப போ என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம் எல் ஏ அவர்கள் அறிவித்தார்கள் அந்த அறிவிப்பிற்கு இணங்க (26.07.2025) தூத்துக்குடி புதிய விமான நிலையம் திறந்து வைக்க வருகை தரும் பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரளாக குவிந்தனர். பின்னர் கருப்புக்கொடி கையில் ஏந்தி ஊர்வலமாக “பிரதமர் மோடியே திரும்பி போ” என்று கோஷங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் காவல்துறையினர் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளீதரன் உள்பட 33 பேரை கைது செய்தனர் அதில் 31 பேர் ஆண்கள் இரண்டு பெண்கள் அடங்குவர். 
இந்த கண்டன கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் ஏ பி சி வி சண்முகம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி EX.MLA, மண்டல தலைவர்கள் T.சேகர், P.செந்தூர்பாண்டி, J.ஐசன் சில்வா, S.P.ராஜன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மாரி குமார், மாநகர் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான் சாமிவேல், மாநகர் மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முத்து மணி, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், ஐ என் டி யு சி மாநிலச் செயலாளர் ராஜ், மாநகர் அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.M.சகாயராஜ், அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர சாந்தி மேரி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி, மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாச ஆசாரி, ரஞ்சிதம் ஜெபராஜ், பாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கேல் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியம்,வார்டு தலைவர்கள் தனுஷ், தாமஸ், மணி, ராஜரத்தினம், சுப்பிரமணியன், ரத்தன், மகேந்திரன் கிருஷ்ணன், சிமியான், அந்தோணிசாமி, ஜெய கிங்ஸ்டன், எட்வர்ட், பெத்துராஜ்,ஜேம்ஸ், மாரியப்பன், மரிய சிங்கம் , பாத்திமா, ஆராய்ச்சி துறை மாநகர் மாவட்ட தலைவர் சிவராஜ் மோகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர் மடத்தூர் ஆரோக்கியம் ஆகியோர் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் பிரதமர் மோடி அவர்கள் விமான நிலையம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 9:30 மணிக்கு கிளம்பி சென்ற பின்பு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

