மல்லை சத்யா உட்பட 4 பேர் மீது மதிமுகவினர் புகார் மனு
வைகோ மற்றும் துரை வைகோ இருவர் மீதும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவு செய்து வரும் மல்லை சத்யா உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சமூக ஊடக பக்கங்களை முடக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மதிமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ ஆகிய இருவரது பொது வாழ்க்கைக்கு கலங்கம் விளைவித்து அச்சுறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் மீடியாக்களிலும் கருத்துகளை வெளியிட்டும், சாதி கலவரத்தை துாண்டும் விதமாக பொது வெளியில் கருத்துகளை பதிவு செய்து வருவதுடன் வைகோ, துரை வைகோ ஆகிய இருவரது நன்மதிப்பையும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மல்லை சத்யா, பசீர், நாஞ்சில் சம்பத், துரைசாமி நால்வரது இணையத்தையும் ஊடகத்தையும் முடக்கி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளி காட்சிகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் சுரேஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மதிமுகவினர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

