காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் முப்பெரும் விழா

காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் முப்பெரும் விழா

காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மண்டலத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா திருவள்ளுவர் மண்டல நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் அரையாடை போராட்ட கள வீரர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

மண்டல தலைவர் எஸ் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஓய்வு ஊதியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொதுச் செயலாளர் கஜேந்திரன், காஞ்சிபுரம் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், செங்கை ஒருங்கிணைப்பாளர் ராமன், துணைத் தலைவர் ஜெகதீசன் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் துலுக்காணம் ஆண்டறிக்கை வாசித்தார். மண்டல பொருளாளர் ஜீவானந்தம் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் டி. கதிரேசன் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். மாநில பொது ஆலோசகர் ஆரோக்கிய ராஜ் மாநில மண்டல நிர்வாகி பரமசிவம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட பொருளாளர் பேச்சியப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் திருமூர்த்தி நன்றிகளை தெரிவித்தார். இதில் சங்கத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டார்கள்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *