நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் கைது
திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளார்.
“கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இதனைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான ஐ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் தொழில் முறையில் அக்குபஞ்சர் மருத்துவர் ஆவார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, ரூ.5 கோடி வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்கில் டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவால் பவர் ஸ்டார் இன்று கைது செய்யப்பட்டார்.
இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பவர் ஸ்டார், 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இதேபோல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

