ராமநாதபுரம்: மண்டபம் குறுவட்டார அளவிலான தடகளப் போட்டிகள்
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் குறுவட்டார அளவிலான தடகளப் போட்டிகள்( மாணவ மாணவிகள் 2025-2026க்கான விளையாட்டுப் போட்டிகள்) நடைபெற்றது.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ராமநாதபுரம் மண்டபம் குறுவட்ட அளவிலான 2025-2026க்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை கடுக்காவலசை அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நடைபெற்றது. இப்போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தொடங்கிவைத்தார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் போட்டிகளை நடத்தினார்.
இப்போட்டியில் தடைதாண்டுதல், , கைப்பந்து, தொடர் ஓட்டம், குண்டுஎரிதல், வாலிபால் மற்றும் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.

