காஞ்சிபுரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்
காஞ்சிபுரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் 1500 வது நாள் தொடர் அன்னதானம் ரோட்டரி முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 01.07.2021 அன்று ரோட்டரி சங்கத் தலைவராக பதவி ஏற்ற Rtn.முருகேஷ் அவர்கள் துவக்கி வைத்த 365 நாள் அன்னதான சேவை திட்டம் ஆனது இன்று 08.08.2025 அன்று 1500 ஆவது நாளை எட்டியுள்ளது.
அவர் தலைவர் பதவி முடித்தவுடன் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் சார்பில் இந்த அன்னதான சேவையை தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.
ஆரம்பித்த தினம் முதல் இன்று வரை வெயிலோ, மழையோ மற்றும் எந்த இடையூறு வந்தாலும் சரியாக மதியம் 12.00 மணி அளவில் காஞ்சிபுரம் ராஜ வீதியில் உள்ள ஐயிராவதிஸ்வரர் கோவிலில் தவறாமல் தினமும் 100க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
1500 வது நாள் விழா கொண்டாட்டத்தை, 1500 நபர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் Rtn.C.V.M.P.எழிலரசன் அவர்களும், காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் திருமதி.Rtn.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் திமுக மாநகர செயலாளர் திரு.C.K.V.தமிழ்ச்செல்வன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் திரு.S.வசந்த்ராஜ் அவர்களும், பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் Rtn.M.அருண்குமார் அவர்களும் வராகிலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் திரு.S.K.P.B.கோபிநாத் அவர்களும் ANR சில்க்ஸ்உரிமையாளர் திரு.நடராஜன் அவர்களும் திவ்யகுமார் ப்ரமோட்டர்ஸ் உரிமையாளர் Rtn.செந்தில்குமார் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் தலைவர் Rtn.A.E.சங்கர், செயலாளர் Rtn.A.R.சிவசிதம்பரம் பொருளாளர் Rtn.பசுமை K.மேகநாதன், உறுப்பினர்கள் Rtn.Kசம்பத், Rtn.S.சக்திவேலன், Rtn.S.அரவிந்தகுமார், Rtn.R.அபிஷேக், Rtn.மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் ஏற்பாட்டினை ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் Rtn.G. முருகேஷ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

