தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் சோதனையின்போது, அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1,52,100 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பதிவுகள் மற்றும் சான்று பெறுவதற்கு லஞ்சப்பணம் கை மாறுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பாலிற்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இடம் இருந்து கணக்கில் வராத ரூ.1,52,100 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக இடைத்தரகர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் ரூ.1,52,100 லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *