சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் 79 ஆவது சுதந்திர தின நாளை கொண்டாடப்பட உள்ளது.
சுதந்திர தினம் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தின்போது எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படுவதை ஏற்படாமல் தடுப்பதற்காக பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தூத்துக்குடியில் இருந்து மைசூர் மற்றும் சென்னை சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சென்ற பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
ரயில் நிலைய நுழைவாயில் மற்றும் ரயிலை அமர்ந்திருந்த பயணிகளின் உடமைகளை தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு நிபுணர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவசக்திவேல், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவியின் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

இதேபோன்று தூத்துக்குடி கடற்பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில் காவல்துறை சார்பில் ரோந்து படகுகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


