காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா
காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன் பங்கேற்று தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர் ஆலயம் தெருவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்க அலுவலகம் முன்பு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் மூர்த்தி கௌரவத் தலைவர் கங்காதரன் மாவட்ட பொருளாளர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வைத்தனர் வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி சங்க நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இவருக்கு சங்கத்தின் சார்பாக பொன்னாடைகள் அணிந்து சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்தார்.

