பொன்னேரி ஸ்ரீ எல்லையம்மன் ஆலய தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக் கடன்
பொன்னேரி அருகே ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மெதூர் பாரதி நகர் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஒருவார காலமாக காப்பு கட்டி விரதம் இருந்து தீக்குண்டம் இறங்கும் நாளில் எல்லையம்மன் ஆலயத்திற்கு கிராம தேவதை ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கரகம் எடுத்து தீச்சட்டி ஏந்தி வந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பின்னர் அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் நடைபெற்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

