மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது
மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வழங்கி பாராட்டினார்.

கொரோனா இரண்டாவது அலையின் போது தொடங்கப் பெற்று மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பசியால் தவிப்போருக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவினை மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கடந்த 1600 நாட்களாக வழங்கி வருகிறார், இவரது சேவையை பாராட்டி சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருதினை வழங்கினார்.
இந்திய அரசின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஐஏஎஸ் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது அவர், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருதினையும் வழங்கினார்.
விழாவில், மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை, மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருதுக்கான கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

