காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம் காந்தி சாலையில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலை காமராஜர் சிலை அருகே நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகி மோதிலால் முன்னிலை வகித்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார். இதில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பு, மாநில வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குருராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பூக்கடை மணிகண்டன், மாநகர மண்டல தலைவர்கள் பட்டு காமராஜ், காஞ்சி காமராஜ், சப்தகிரி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நூல் கடை ராதாகிருஷ்ணன், இஸ்டலிங்கம், பூந்தோட்டம் பழனி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் டி பி ஸ்ரீனிவாசன், முத்து கணேசன் நாடார், மூர்த்தி ராஜ் திருவேங்கடம், சந்தானம், லோகநாதன், ராஜன் ஷா, வையாஊர் லோகு கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் மோதிலால் நன்றிகளை தெரிவித்தார்.


