காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த EPS-க்கு கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு
காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில் கும்ப மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை வலியுறுத்தி சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, 36ஆம் நாளான காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி, குமரக்கோட்டம் முருகன் கோயில் அருகில் அருகில் பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக பொன்னேரி கரை மேம்பாலம் அருகில் கும்ப மரியாதையுடன் கலை நிகழ்ச்சி உடனும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் செங்கழு நீரோட வீதியில் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் கங்கைகொண்டான் மண்டப பகுதியில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் அம்மா பேரவை செயலாளர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதே போல் கச்சபேஸ்வரர் ஆலயம் அருகில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் பேரரசு வேலரசு தலைமையிலும் நேரு மார்க்கெட் எதிரே மாமன்ற உறுப்பினர் ஜோதிலட்சுமி சிவாஜி ஏற்பாட்டிலும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் கும்பம் மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் குண்ணாவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநகர பகுதிசெயலாளர்கள் பாலாஜி ஸ்டாலின், கோல்ட் ரவி, ஜெயராஜ், எஸ் எஸ் ஆர் சத்யா, ஒன்றிய செயலாளர் கும்பகோணம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



