மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: காஞ்சிபுரம் MLA எழிலரசன் ஏற்பாடு
காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏற்பாட்டில் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 10ஆயிரம் பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இதனை குறிப்பிட்டார்.
“பேரறிஞர் அண்ணாவின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் வருகிற 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30- மணி அளவில் காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.”
“இதில் 75 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அருகில் உள்ள செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் அனைத்து வகையான பட்டப்படிப்புகளுக்கும் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.”
“இந்த வேலை வாய்ப்பு முகாம் வழக்கமான வேலை வாய்ப்பு முகாமாக இல்லாமல் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டு ஸ்கேன் செய்து அவர்களுக்கு வேலை தேடுவதற்கான யூனிக் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் அவருடைய விவரங்கள் அறிந்து சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு வேலை தேடுபவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு பத்தாயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
“இந்த வேலைவாய்ப்பு முகாமை விவசாய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க. சுந்தர் ,மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் தனியார் கல்லூரி தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.”
“மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு குடிநீர் மற்றும் தேநீர், ஸ்னாக்ஸ் வசதிகளும் உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார். உடன் பகுதி செயலாளர் திலகர் மற்றும் ஆதித்யன் அகத்தியன் ஆகியோர் இருந்தனர்.

