தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பாளையங்கோட்டையில் நடைபெறும் வாக்கு திருட்டு மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சிட்டி டவரில் வைத்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தார், தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ. பி. சி. வி. சண்முகம் அவர்கள், தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பி.பால்ராஜ் அவர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். டேனியல்ராஜ் அவர்கள், எம். பி. சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் வருகிற 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெறும் மாநில மாநாட்டில் 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு தலைவர்கள், மண்டல தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் என 100 பேருக்கு காங்கிரஸ் வேஷ்டி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் மற்றும் பால்ராஜ் வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் T.சேகர், S.P.ராஜன், P. செந்தில் பாண்டி, J. ஐசன் சில்வா, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான் சாமுவேல், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், SC துறை மாவட்ட தலைவர் A.D.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் S.கோபால், குமாரமுருகேசன், சித்திரை பால்ராஜ், மைக்கில் பிரபாகர், ராஜரத்தினம், சுப்பிரமணியன், வெங்கட் சுப்பிரமணியன், EX.MC தாமஸ், ரத்தன், நாராயணசாமி, சீனிவாசன், மகேந்திரன், சாமிகண்ணு, வேல் குமார், முத்து விஜயா, கமலா தேவி, ஜெயமணி சுரேஷ், எபனேசர், பரமசிவன், பெத்துராஜ், சிமியான், முருகேசன், மரிய சங்கம், முனியசாமி, சின்னக்காலை, சரவணன், கணேசன், சரஸ்வதி நாதன், பிராங்கிளின், டைட்டஸ், அருண், மகாலிங்கம், வில்சன், ஜான்சன், ஜோ, இருதயராஜ், அருணாச்சலம், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *