காஞ்சிபுரம் ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரம்
காஞ்சிபுரம் ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரத்தை அண்ணா லயன்ஸ் சங்கம் மூலம் துவக்கி வைப்பு.
காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம், காஞ்சி டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் அண்ணா லயன்ஸ் சங்கம் தலைவர் கிருபாகரன் தலைமையில், சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் மகேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மேலும் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் LCIF நிதியின் கீழ் ரூ.18 லட்சம் நிதி உதவி பெறப்பட்டு தற்போது மூன்று டயாலிசிஸ் ரூபாய் 24 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளதாகவும், இது உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
LCIF நிதியுதவியில் 18 லட்சம் 75 சதவீதம் மற்றும் ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனை மூலம் 6 லட்சம் 25 சதவீதம் பெறப்பட்டு இந்த டயாலிசிஸ் சென்டர் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனையில் நவீன வசதியுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு தனியாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இரண்டு மிஷின்கள் இந்த மருத்துவமனையில் இயங்கி வருகின்றது.
இதனுடன் புதிய 3 மிஷின்கள் வழங்கப்பட்டு மொத்தம் ஐந்து மெஷின்கள் செயல்படுகின்றன. இவற்றில் குறிப்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் இதற்காக முதலமைச்சர் காப்பீடு திட்டம் இலவசமாகவும் காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்கள் மிகக் குறைந்த கட்டணமாக 1,500 ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டர் அமைவதற்கு ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அருண்ராஜ், அண்ணா லயன்ஸ் சங்கம் மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், LCIF தலைவர் சங்கரன், கூட்டு மாவட்ட துணை தலைவர் சுரேஷ், முதல் மாவட்ட துணை ஆளுநர் பூர்ணச்சந்திரன், இரண்டாம் மாவட்ட துணை ஆளுநர் ரவி, முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆலோசகர் ஹரிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

