ஓணம் பண்டிகை: காஞ்சிபுரத்தில் பூக்கோலமிட்டு கொண்டாட்டம்
காஞ்சிபுரத்தில் ஓணம் பண்டிகை ஒட்டி பல்வேறு வீடுகளில் திருவோண பூக்கோலம் போட்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு இல்லங்களில் ஓணம் பண்டிகை ஒட்டி திருவோண பூக்கோலம் போட்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
அந்த வகையில் ஜெயஸ்ரீ நாட்டியாலயா பள்ளி ஆசிரியர் ஜெயஸ்ரீ குடும்பத்தினர் அவர்கள் வீட்டில் திருவோண பூக்கோலம் போட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதே போல் மீனாட்சி நகர் பகுதியில் சுமேஷ் நாராயணன், சதீஷ் நாராயணன் குடும்பத்தினர் தங்கள் வீட்டு வாசலில் திருவோண கோலமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி அறுசுவை உணவு உண்டு ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினார்.
மேலும் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


