கப்பலோட்டிய தமிழன் வ உ சி பிறந்த நாள்: தூத்துக்குடி மாநகர காங்கிரசார் கொண்டாட்டம்

கப்பலோட்டிய தமிழன் வ உ சி பிறந்த நாள்: தூத்துக்குடி மாநகர காங்கிரசார் கொண்டாட்டம்

கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு வழக்கறிஞர் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பர்ண பாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா முன்னிலை வகித்தனர். இதில் SC துறை மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், முன்னாள் மகிலா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, மாவட்ட செயலாளர் கோபால், வார்டு தலைவர்கள் மாரியப்பன், ராஜரத்தினம், சுப்பிரமணியன், மரிய சிங்கம், ரத்தன், இளைஞர் காங்கிரஸ் ரெனிஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *