ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 17ஆம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா முன்னிட்டு திருத்தேர் பவனி விழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை வேளாங்கண்ணி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது.

இந்த ஆலைத்தின் 17ஆம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆசீர்வாத பெறுவிழாவின் 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் பவனி விழா நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கன்னி ஆலய பங்குதந்தை சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த பவனி விழாவில், பல்வேறு ஆலையங்களின் சுமார் 20க்கும் மேற்பட்ட பங்குதந்தைகள் கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர்.

ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர் பவனி, பாரதிநகர், காந்தி சாலை, திருமங்கைஆழ்வார் தெரு வழியாக வந்து மீண்டும் ஆலய வளாகத்திற்குள் முடிவடைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வமேரி அருள்ராஜ், ஆலயத்தின் ஆலோசகர் எல்.ஏ.அருள்ராஜ், ஆலைய நிர்வாகிகள் சுந்தர்ராஜ், பெர்னார்ட், லாரன்ஸ் மற்றும் பாரதிநகர் குடியிறுப்போர் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விழாவில் செல்லம்பட்டிடை, தொடுகாடு, மொளச்சூர், வளர்புரம், நெமிலி, பால்நல்லூர், எறையூர், பண்ருட்டி, ஒட்டந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். ஆசிராவத பெருவிழாவின் இறுதி நாளான இன்று அன்னையின் பிறப்பு விழா நடைபெற உள்ளது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *