அண்ணா பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

அண்ணா பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் விழா: தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.வை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, தமிழ் சாலை காய்கனி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *