மகாளய அமாவாசை:காஞ்சிபுரத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு

மகாளய அமாவாசை:காஞ்சிபுரத்தில் தர்ப்பணம் செய்து வழிபாடு

காஞ்சிபுரத்தில் மகாளய அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் புனித தீர்த்தங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

காஞ்சிபுரத்தில் புரட்டாசியில் வரும் அம்மாவாசை, மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு புனித தீர்த்தங்களில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

அந்த வகையில் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் ஆலயம், சர்வ தீர்த்த திருக்குளம், புண்ணியகோட்டிஸ்வரர் ஆலய திருக்குளம், தாயார் அம்மன் திருக்குளம், சாந்தாலீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் உள்ள திருக்குளங்களில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களின் ஆசி பெற வேண்டி தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடி தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்து முன்னோர்களின் ஆசி பெற்று சென்றனர்.

 

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *