காஞ்சிபுரம்: வழக்கறிஞர்கள் உண்ணாவிரத அறவழிப் போராட்டம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வழக்கறிஞர்கள் உண்ணாவிரத அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 8 ஆம் தேதி (08.09.2025) அன்று காவல்துறையினர் எவ்வித அனுமதியும் இன்றி அதிகப்படியான காவலர்களை குவித்து வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தல் விளைவித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து நேற்று (25.09.2025) நடைபெற்ற அசாதாரண பொது குழு கூட்டத்தில் அசம்பாவித சம்பவம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் செயலாளர் வழக்கறிஞர் நிர்மல் குமார் தலைமையில் இன்று உண்ணாவிரத அறவழி போராட்டம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள், இருபால் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

