ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொருப்புக்குழு உறுப்பினரும், பொருளாளருமான ராஜாராம்பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், நேற்று கரூரில் தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தாலுகா நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்புபேட்ஜ் அணிந்தும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அலுவல்கள் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில் மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், பொறுப்புக் குழு உறுப்பினர் ஜோதி பாலன், நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் காருகுடி சேகர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜா, போஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

