காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநகர பொதுச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான முனுசாமி படத்திறப்பு விழா
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநகர பொதுச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான முனுசாமி படத்திறப்பு விழா மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்பு.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் காங்கிரஸ் மாநகர பொதுச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான முனுசாமி அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
வழக்கறிஞர் ஏங்கல்ஸ் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அண்ணாரது திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசராகவன், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி. வி. மதியழகன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், திமுக மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர்கள் தாடி கார்த்திகேயன், கார்த்திக், கதிரவன், மாநகர தலைவர் நாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

