சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 119வது பிறந்தநாளில் புரட்சிகர இளைஞர் முன்னணி புதுச்சேரி மாநில குழு மரியாதை
புதுச்சேரி நேரு வீதி மிஷன் வீதி சந்திப்பில் புரட்சிகர இளைஞர் முன்னணி புதுச்சேரி மாநில குழு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 119வது பிறந்தநாளில் அவர்களின் திருஉருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் RYF புதுச்சேரி மாநில அமைப்பாளர் தோழர் நவீன்குமார், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் தோழர் பார்த்தசாரதி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் தோழர் பாஸ்கர், அகில இந்திய ஐக்கிய மாதர் சங்க புதுச்சேரி மாநில தலைவர் தோழர் பூங்குழலி, அகில இந்திய ஐக்கிய மாதர் சங்க புதுச்சேரி மாநில பொருளாளர் தோழர் ஈஸ்வரி, ஐக்கிய மாதர் சங்க மாநில குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் தோழர் சரவணன், நடைபாதை வியாபாரிகள் சங்கம் தோழர் சீனு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

