காஞ்சிபுரம்: செல்வ விநாயகர், துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
காஞ்சிபுரம் சின்னசாமி நகர் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் செல்வ விநாயகர், துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் அரசு நகர் பகுதியில் உள்ள சின்னசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர், துர்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அனு தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சிறப்பு கொலு அமைக்கப்பட்டு விநாயகர் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான, v. சோமசுந்தரம், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மேலும் தொழிலதிபர் பார்டர் பெருமாள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாந்தி சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு விழா வினை துவக்கி வைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மலர் மாலைகளும் பொன்னாடைகளும் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலய நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு பொன்னாடைகளும் மலர் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் அப்பகுதி வாசிகள் ஆன்மிக ஆன்றோர்கள் சான்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


