சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 97வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் சிறப்பான கொண்டாடப்பட்டது.

சில்வர் புரத்தில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பிரபு ரசிகர் மன்ற தலைவர் குமார முருகேசன் முன்னிலை வகித்தார்


இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, கோபால், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலாதேவி, வார்டு தலைவர்கள் சித்தரை, பால்ராஜ், முருகேசன், ரதன், வெள்ளையன், சாமிக்கண்ணு மற்றும் சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

