காந்தி பிறந்தநாள்; காமராஜரின் நினைவு தினம்: தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் மரியாதை

காந்தி பிறந்தநாள்; காமராஜரின் நினைவு தினம்: தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் மரியாதை

தூத்துக்குடி: அண்ணல் காந்தியடிகளின் 157ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் 157ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவ சிலைக்கும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில். மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், SC துறை மாவட்ட தலைவர் A.D.பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்ன பாஸ், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமாரமுருகேசன், அந்தோணி ஜெயராஜ், கதிர்வேல், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரியா ஆல்வின், முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ஆசீர் செல்வன், மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், முத்துராஜ், மற்றும் வார்டு தலைவர்கள் ரத்தன் அந்தோணிசாமி ரெனிஸ் பாபு, சுரேஷ், ரூஸ் வேர்ல்ட், பெனடிட், சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *