காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மாநகர தலைவர் நாதன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலை காமராஜர் சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் காமராஜர் நினைவு நாளை வெட்டி அன்னாரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிவி மதியழகன் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி வைத்தனர்.




மாநில செயற்குழு உறுப்பினர்கள் பத்மநாபன் அரங்கநாதன் நகர் அன்பு, சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி லியாகச் ஷெரிப், மாநகர பகுதி தலைவர்கள் காமராஜ், பட்டு காமராஜ், வட்டாரத் தலைவர் பிச்சாண்டி, மகேந்திரன், மாநில நெசவாளர் அணி லோகநாதன், தென்னேரி சுகுமார், செவிலிமேடு பிரபு முத்து, கணேசன், ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகி, பிள்ளையார்பாளையம் பாலமுருகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் டிபி சீனிவாசன், லயன் குப்புசாமி, வழக்கறிஞர் அரசு சுமங்கலி சீனிவாசன், நூல் கடை ராதாகிருஷ்ணன் வஜ்ரவேல், கலில் பாய் மோதிலால், பூந்தோட்டம் பழனி ஐ என் டி யு சி கஜேந்திரன், ஞானவேல், வையாவூர் லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற கையெழுத்து பெயர் இயக்கத்தினை முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மதியழகன் துவக்கி வைத்தார்.


