காஞ்சிபுரம் சோழன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரபுரம் பகுதியில் இயங்கி வரும் சோழன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் விஜயதசமியை ஒட்டி பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அதற்கேற்ப தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள், கோயில்களில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து கல்வியை ஆரம்பிக்கும் வித்யாசரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளிகளில் வித்யாசரம்பம் நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சஞ்சீவிஜெயராமன் மழலையர்களை மடியில் அமர வைத்து நெல் மணியில் ‘அ’ எழுத்து எழுத வைத்தனர்.


பள்ளியில் சேர வந்த குழந்தைகளுக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். பள்ளியில் சேர அழுது கொண்டே வந்த குழந்தையை ஆசிரியர்கள் விளையாட வைத்து வகுப்பறையில் அமர வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன், உதவி தலைமை ஆசிரியர் கோபால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

