காஞ்சிபுரம் நாகம்மையார் படிப்பகத்தில் முன்னாள் நெசவாளர் அணி அமைப்பாளர் நினைவு நாள் அனுசரிப்பு
காஞ்சிபுரம் நாகம்மையார் படிப்பகத்தில் முன்னாள் நெசவாளர் அணி அமைப்பாளர் சி கே வஜ்ரவேல் அவர்களின் 13 வது நினைவு நாள் வட்டச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள நாகம்மையார் படிப்பகம் முன்பு முன்னாள் நெசவாளர் அணி அமைப்பாளரும் வட்டக் கழக செயலாளர் மன சி கே வஜ்ரவேல் அவர்களின் 13 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் வட்ட செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சன் ஃபிரண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், பொருளாளர் சுதா என்கின்ற சுப்பராயன், பகுதி செயலாளர் தசரதன், திலகர் சந்துரு வெங்கடேசன், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சோபனா கண்ணன், ரமணி, பொன்னம்பலம், கமலக்கண்ணன், வழக்கறிஞர் பிரிவு ரமேஷ், சிவக்குமார் உள்ளிட்ட வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் வட்ட பொறுப்பாளர்கள், மாநகர மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

