வாக்குத்திருட்டை தடுப்போம்! ஜனநாயகத்தை காப்போம்!!- தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

வாக்குத்திருட்டை தடுப்போம்! ஜனநாயகத்தை காப்போம்!!- தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

தூத்துக்குடி: இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து மோடி அரசுக்கு ஒரு தலை பட்சமாக ஆதரவு அளித்து வருகிறது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ‘வாக்குத்திருட்டை தடுப்போம்!! ஜனநாயகத்தை காப்போம்!!’ என்ற தலைப்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

வாக்குத்திருட்டின் மூலம் ஹரியானா டெல்லி மகாராஷ்டிரா மாநிலங்களில் குறுக்குவழியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசை கண்டித்தும், அதற்கு துணை நின்ற இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், ‘வாக்கு திருட்டை தடுப்போம்!! ஜனநாயகத்தை காப்போம்!!’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் தூத்துக்குடி 1ம் கேட் காந்தி சிலை முன்பு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கையெழுத்து இயக்கப் பணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் கடை மற்றும் நிறுவனங்களுக்கு சென்று வியாபார பெருமக்களிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்து இயக்க படிவத்தில் கையெழுத்து வாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வக்கீல் மகேந்திரன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடின்டா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, செந்தூர்பாண்டி, ஐ என் டி யு சி மாநிலச் செயலாளர் ராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பரண பாஸ், ஐ என் டி யு சி மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முத்து மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எடிசன், சாமுவேல் ஞானதுரை, எஸ். சி.பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆல்வின் மரியராஜ், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஆரோக்கியம், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாணவர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பிரவீன் துறை, முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் கமலா தேவி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோபால், நெப்போலியன், சரஸ்வதி நாதன், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், ரஞ்சிதம் ஜெபராஜ், வாசி ராஜன், மகாலிங்கம், ஜெய கிங்ஸ்டன், சசி, அருள்வளன், சிமியான், குமார முருகேசன், தாமஸ், பொன்ராஜ், ரூபன் வேத சிங் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங், கணேசன், முனியசாமி, ராஜன், முத்துராஜ், கோபி, மணி, ராமசாமி, சித்திரை பால்ராஜ், எபனேசர், குமாரசாமி, சிவன் யாதவ், மகாராஜன், எட்வர்ட், பெத்துராஜ், சீனிவாசன், ராஜா, சாமி கண்ணு உள்பட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *