செங்கம் செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

செங்கம் செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உருவாகி வரும் செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் பகுதியில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் குப்பநத்தம் அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 750 கன அடியாக அதிகரித்துள்ளது.

குப்பநத்தம் மனை அதன் முழு கொள்ளளவான 59 அடியில் தற்போது 54 அடியை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து உபரி நீராக சங்கம் செய்யாற்றில் அணைக்கு வரும் 250 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, செங்கம் செய்யாற்றின் கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *