ராமநாதபுரம் ஆர்.காவனூரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வருஷா பிஷேகம்
ராமநாதபுரம் ஆர்.காவனூரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வருஷா பிஷேகம்
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூரில் அருள் பாலித்து வரும் பழமைவாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வருஷா பிஷேகம் நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரில் அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன் தலைமையில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரவிய பொடி, பால், இளநீர், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சந்தன அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து 1008 மந்திரங்கள் வாசிக்கப்பட்டது. இதன்பின்பு விநாயகருக்கு பிரசாதம் படைக்கப்பட்டது, இதில் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
