மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில்

ஆடி ஆமாவாசையை முன்னிட்டு பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

★ 1,000 பேருக்கு அன்னதானம்

ஆடி அமாவாசையை ஒட்டி, காந்தி அருங்காட்சியத்தில் நடைபெற்ற நிகழ்வில் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் மூலமாக, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள ஆதரவற்றோர் வறியோர், ஏழைகளுக்கு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணி தொடர்கிறது.

ஆடி அமாவாசையை ஒட்டி, தினமும் வழங்கும் அன்னதானத்தோடு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

காந்தி மியூசியத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா, காந்தி அருங்காட்சியகம் கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முன்னாள் அறங்காவலரும் சமூக ஆர்வலருமான சண்முகசுந்தரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவினை வழங்கினார்.

நிகழ்வில், பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கும், மதுரை நகர் முழுவதும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்

தினமும் 300 பேருக்கு அன்னதானம் வழங்கி வரும், மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட்க்கு உதவ 94426 30815 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *