வாஜ்பாய் பிறந்தநாள் விழா: காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் கொண்டாட்டம்

வாஜ்பாய் பிறந்தநாள் விழா: காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் கொண்டாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 101ஆவது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அனைத்து அணி மற்றும் பிரிவுகளின் அமைப்பாளர் ராகவன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னாரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றினார் . இதில் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி, மாவட்ட துணைத் தலைவர்கள் அஞ்சனாதேவி அரசன், அதிசயம் குமார், ஓம் சக்தி பெருமாள,  கூரம். விஸ்வநாதன், மண்டல தலைவர்கள் ஜெயபிரகாஷ், தனலட்சுமி, மாவட்ட பிரிவு தலைவர்கள் காஞ்சி ஜீவானந்தம், காமாட்சி, ஆறுமுகம், புல்லட் சதீஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சத்யநாராயணன், மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் மதன் ராஜ் உள்ளிட்ட மாநகர மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *