விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம் சார்பில் இனிப்புடன் கூடிய அன்னதானம்

காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் 2025-2026 ம் ஆண்டு 56 வது நாள் சேவையாக சங்கத் தலைவர் கிருபாகரன் தலைமையில் இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்திஸ்வரர் ஆலயம் முன்பு அண்ணா லயன் சங்கத்தின் சார்பில் இனிப்புடன் கூடிய அன்னதானம் விஜயகாந்த் பிறந்த நாளை ஒட்டி சங்கத் தலைவர் கிருபாகரன் தலைமையில் இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நமது சங்கத்தின் LCIF ஒருங்கினைப்பாளர் திரு.Lion.R.பூபதி அவர்களும் நமது சங்கத்தின் செயலாளர் திரு Lion.K.முரளி அவர்களும் இணைந்து நமது பன்னாட்டு இயக்குநர் PMJF.Lion.S.மகேஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் காலை 9.00 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் கோயில் வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2வது சேவையாக தாத்திமேடு ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிக்கு நமது சங்கத்தின் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தின நாளிதழ்கள் வழங்கப்பட்டன.
3வது சேவையாக சார்பில் மகளிர் ஒருவருக்கு புடவை பிளவுஸ் வழங்கப்பட்டது.
4 வது சேவை தினம் ஒரு சேவையான நமது சங்கத்தின் சார்பில் ஆண் ஒருவருக்கு வஸ்திரம் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.
5 வது சேவை தினமும் ஏழை எளிய மாணவ மாணவிக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. 6 வது சேவை தினமும் நமது சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடர்வணத்தை பராமரிக்கப்பட்டது.
7 வது சேவை 1.நீரிழிவு நோய் 2.குழந்தைகளுக்கான புற்றுநோய் 3.கண் பாதுகாப்பு 4.இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவற்றின் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 8 வது சேவை தினம் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 9 வது சேவை தினமும் 2 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த தலைவர் PMJF.Lion.P.கிருபாகரன்,
செயலாளர் Lion.K.முரளி, MJF.Lion.R.பூபதி, PMJF.Lion.D.குமரேசன், Lion.SKA.நந்தகுமார்
Lion.K.R.சங்கர் ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் லைன் பூபதி நன்றிகளை தெரிவித்தார்.