காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேசை, நாற்காலி வழங்கும் விழா
காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டுக்காக 25 மேசை மற்றும் நாற்காலி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வீதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக 25 மேஜை மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எழிலரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முப்பதாவது வார்டு மாம் என்ற உறுப்பினர் சுரேஷ், கமலக்கண்ணன், மண்டல குழு தலைவர் சந்துரு, பகுதி செயலாளர் திலகர், வட்டச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பள்ளி சார்பில் கதர் ஆடைகள் அணிவித்து சிறப்பு வரவேற்பாளிக்கப்பட்டது.

இதில் முதன்மை கல்வி அலுவலர் நளினி, வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் பள்ளியின் எஸ் எம் சி தலைவர் முத்துலட்சுமி கல்வியாளர் உஷாராணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் லல்லி அனைவரையும் வரவேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.


