காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பழங்குடி மக்களுக்கு பத்திரிகையாளர் பாஸ்கர் ஒருங்கிணைப்பில் தீபாவளி பரிசுகள்
தீபாவளி பண்டிகை ஒட்டி பத்திரிகையாளர் பாஸ்கர் ஒருங்கிணைப்பில் பழங்குடி மக்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை ஒட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் 19 குடும்பத்தினருக்கும் வையாவூர் சாலையில் உள்ள 10 குடும்பத்தினருக்கும் பத்திரிகையாளர் பாஸ்கர் குடும்பத்துடன் மற்றும் நண்பர்கள் ட்ரீம்ஸ் துணிக்கடை உரிமையாளர் அஜித் குமார், ஹூண்டாய் பணியாளர் நண்பர்கள் செந்தில்குமார் அவர்களுடைய குழுவினர், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பிரபு அவர்கள் உதவியுடன் தீயணைப்பு துறை முகுந்தன், அவருடைய நண்பர்கள் மற்றும் சிவசண்முகசுந்தரம், குணா, விஜய் அவருடைய பெரும் உதவியுடன் சிறப்பாக அனைத்து மக்களுக்கும் தீபாவளி பரிசாக புத்தாடை, இனிப்பு, பட்டாசு, பெட்ஷீட், பாய், பிரியாணி உள்ளிட்டவர்களை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.



