காஞ்சிபுரம் கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி விழா

காஞ்சிபுரம் கற்பக விநாயகர் ஆலயத்தில் எட்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி காஞ்சிபுரம் வையாவூர் சாலை கோனேரி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச் சங்கத்துக்கு உட்பட்ட மூவேந்தர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் எட்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலையில் சிறப்பு யாகங்களும் செய்யப்பட்டு உற்சவர் விநாயகர் மூஷிக வாகனத்தில் ராஜா அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
மாலை மூலவர் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தியானலிங்க விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டது .
இதில் மாணவ மாணவிகளின் சிலம்பம், மான் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவர்களுக்கு ஆளை நிர்வாக சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகரின் அருளை பெற்று சென்றனர்