திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் திமுக அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பரபரப்பான சூழல் நிலவியது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், சமத்துவ தலைவர் K. ஆம்ஸ்ட்ராங் படுகொலையினை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களும் CBI விசாரணைக்கு உத்தரவிட்டும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை இதுவரை CBI யிடம் வழங்காமல் மெத்தனப்போக்கு காட்டி வரும், அலட்சியம் காட்டி வரும், திமுக அரசையும், காவல் துறையையும் கண்டித்து தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர், வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் D. சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் அண்ணன் மைக்கேல் தாஸ் மற்றும் மாநில தலைமை நிலை செயலாளர் அண்ணன் முத்துகிருஷ்ணன் மற்றும் மாநில செயலாளர் பிரவீன் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் U. பிரபு குமார், மாவட்ட இணை செயலாளர் K.சதீஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அமுதன், மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் காஞ்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயசீலன், மாவட்ட மாணவரணி செயலாளர் சூரியா, ஒன்றிய தலைவர் பிரபாகரன், ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய் பீம் சாம், ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் பிரவீன் குமார், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆதிகேசவன், வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மற்றும் கிளை பொறுப்பாளர்கள், பெண் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

