வீடுகளில் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி!
காஞ்சிபுரம் அருகே கழிவுநீருடன் மழைநீர் சாலையில் தேங்குவதால் மழை நீரில் சேர் போட்டு அமர்ந்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

வடகிழக்கு பருவமழை துவங்கி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு ராஜாஜி மார்க்கெட் அருகே தும்பவனம், அருணாச்சல தெரு பகுதியில் 20க்கு மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக மழைநீருடன் கழிவு நீர் புகுந்ததால் சாலை முழுவதும் மழை நீர் தேக்கம் அடைந்து துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயத்தில் உள்ளனர்.
வீடுகள் முழுவதும் கதிர்மையுடன் மழைநீர் தேர்வுகளாக புகார் அளித்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி ஊரில் சாலையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் சேர் போட்டு அமர்ந்து மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இந்த பகுதியில் தொடர்ந்து மழைநீர் தேங்கி அவதிப்பட்டு வருவதாகவும், பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துடனும் மாவட்ட நிர்வாகத்துடனும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்பது அப்பகுதியில் மக்கள் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.
இதில் பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன் துணைத்தலைவர் அதிசயம், குமார், காமாட்சி, ஆறுமுகம், மாநகரத் தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

