காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீகந்த சஷ்டி வேத பாராயணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீகந்த சஷ்டி வேத பாராயணம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 46வது ஆண்டு ஸ்ரீ கந்த சஷ்டி வேத பாராயணம் சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடன் துவங்கியது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர என்ற சரஸ்வதி மகா சாமிகள் பரிபூரண ஆசியுடன் கிருஷ்ண வேத மூல நித்திய பாராயண டிரஸ்ட் சார்பில் 46வது ஆண்டு ஶ்ரீ கந்தசஷ்டி வேத பாராயணம் துவங்கியது.

22 10 2025 முதல் 27 10 2025 வரை நடைபெற உள்ள இந்த வேத பாராயணத்தில் 60க்கும் மேற்பட்ட வேதவிற்பனர்கள் கலந்து கொண்டனர்.

அனு தினமும் மூன்று முறை வேளை வேத பாராயணம் நடைபெறும். உலக மக்கள் நன்மைக்காகவும் நோய் நொடியின்றி வாழ்வு பெறவும் அனைத்து ஜீவ ராசிகளும் ஆரோக்கியமாக வாழ்வு பெற வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டியும் இந்த வேதபாரணம் மகா சுவாமிகள் அனுகிரகத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருஷ்ண யஜூர் வேத மூல நித்ய பாராயணம் டிரஸ்டின் டிரஸ்டிகள் ஸ்ரீ டி எஸ் சந்திரசேகரன், ஸ்ரீ ஆனந்த கனபாடிகள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர், நிர்வாகி கீர்த்திவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *