காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அவிட்ட பூஜை: சங்கராச்சாரியார் சுவாமிகள் தலைமையில் புஷ்பாஞ்சலி
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற அவிட்ட பூஜையில் சங்கராச்சாரியார் சுவாமிகள் தலைமையில் புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனைகள் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திரு நட்சத்திரமான அவிட்ட நட்சத்திர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் காலை சிறப்பு கச்சேரிகள் நடைபெற்று மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வண்ண வாசனை மலர் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தீபாராதனைகள் மற்றும் புஷ்பாஞ்சலி செய்து வழிபாடு செய்தார். இதில் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச ஐயர் ஜானகிராமன், நிர்வாகி கீர்த்தி வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆச்சாரியா சுவாமிகளின் அனுகிரகம் பெற்று சென்றனர்.


